வால்பாறை டு பொள்ளாச்சி சாலையில் விபத்து..!
வால்பாறையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கவர்கல் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் மோதி கொண்டது இதில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை விபத்திற்கான காரணம் கேட்டறிந்த போது வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேக மூட்டங்கள் அதிகம் காணப்பட்டதால் சாலை தெளிவாக தெரியாததால் இந்த விபத்து நடைபெற்றது என்று கூறப்படுகிறது .
நாளைய வரலாறு செய்திகளுக்காக அலாவுதீன் ஆனைமலை.