கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலையில் தென்கயிலை என்று அழைக்கப்படும்
அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் ஆலயம் சுமார் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6000ம் அடி உயரத்தில் அமையப்பெற்ற பிரசித்திப்பெற்ற சைவத் தலம் வருடந்தோரும் சித்ரா பெளர்ணமி அன்று ஒரேநாள் இரவில் 2 லட்சம் பக்தர்கள் மலை ஏறுவார்கள் கரடுமுரடான இந்த மலைப்பாதை சிரான படிகள் தொடங்கி சமவெளி பாதை, சரிவான வழுக்கு பாறை, களியுருண்டைமலை, சந்தன மலை, கடந்து கோவில் அடைய 7 சிகரங்களை கடக்கவேண்டும்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மூங்கில் கழியுடன் இன்று காலை வெள்ளியங்கிரி மலையில் ஏறினார்
கரடுமுரடான வெள்ளியங்கிரி மலைப்பாதையை சீராக அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ததுடன் பல அறிவுருத்தல்களையும் வழங்கினார்.
அமைச்சரின் மலையேற்றத்தின் போது இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் திரு.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் திரு.கண்ணன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உடனிருந்தனர் .
-ச.கலையரசன்.