கோவை மாவட்டம். போத்தனூர் 99 வார்டு ஸ்ரீராம் நகர் பகுதியில் கடந்த சில வருடங்களாகவே ஸ்ரீராம் நகர் காளியப்ப கோனார் வீதி போன்ற பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் மழைக்காலம் நெருங்குவதால் பழுதடைந்த மின்கம்பங்கள் விழுந்துவிடுமோ என்றஅச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா அவர்களிடம் தங்கள் பகுதியில் இருக்கும் மின்கம்பங்களை பற்றி சம்பந்தப்பட்ட மின் பொறியாளர் மற்றும் அதிகாரியிடம் மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா கவனத்தில் எடுத்துச் சென்று உடனடியாக பழுதடைந்த மின்கம்பங்கள் அனைத்தையும் மாற்றி புதிய மின் கம்பங்கள் அமைத்து மக்கள் குறையை சரி செய்து வைத்திருக்கிறார்.
இதுபோன்று 99 வது வார்டு பகுதியில் தார்சாலை சாக்கடை வசதி சாலை ஓரத்தில் விழும் நிலையில் இருக்கும் மரங்களை அகற்றுவது போன்ற பணிகளை உடனுக்குடன் சரி செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வரும் அஸ்லாம் பாஷா பாராட்டுக்குரிய மாமன்ற உறுப்பினர் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.