உலகெங்கிலும் பெருகிவரும் கார்ப்பரேட் வேலை வாய்ப்புகளால், மனிதவளத் துறையில் எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. நபர்களை சிறப்பாக நிர்வகிப்பது, அவர்களின் மேம்பாடு, உற்சாகப்படுத்தல் மற்றும் பயிற்சியளித்தல் போன்றவை ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அம்சங்கள். இந்த வகையில் மனிதவளத் துறை பெரும்பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (எம்.பி.ஏ)முதுகலை மேலாண்மை ஆராய்ச்சி துறையினுடன் இணைந்து தேசிய மேலாண்மை நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து கல்லூரி அரங்கில் கல்லூரி மாணவர்களுடன் பல்வேறு நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறையினர் பங்குபெற்ற எச் ஆர் கான்க்ளேவ் 2022 உலகத்திற்கான புதிய மில்லியனித்தை செத்துக்குதல் எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை மேலாண்மை ஆராய்ச்சி துறையின் இயக்குனர் சுதாகர், பேராசிரியர் பிரபாகர்,ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் முத்துவேலப்பன்,தேசிய மேலாண்மை நிறுவனத்தின் கோவை மாவட்ட தலைவர் ஸ்ரீதர்,கார்ப்பரேட் எச்.ஆர் பொன் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
– சீனி,போத்தனூர்.