சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் 20 வார்டுகளை கொண்டது கடந்த வருடம் டிசம்பர் 29ம் தேதி
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் கன்னியப்பன் (தே.மு.தி.க.) தலைமையில் கவுன்சிலர்கள் பூவாயி, சேகர், செந்தில்குமார், பத்மினிபிரியதர்ஷினி, தனலட்சுமி உள்பட 11 பேர்கொண்ட வார்டு உறுப்பினர்கள் ஒன்றியக்குழு தலைவர் லிங்கம்மாள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்ததல்
லிங்கம்மாள் கடந்த பிப்ரவரி 18ம் தேதி ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ஆத்தூர் ஒன்றியக் பெருந்தலைவராக 4 வது வார்டு கழக கவுன்சிலர் டாக்டர் .பத்மினி பிரியதர்சினி தேர்ந்தெடுக்கப்பட்டார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சேலம் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளருமான எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன். கெளதம சிகாமணி, ஏ.ஏ.ஏ.ஆறுமுகம்,ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் செழியன் ,முருகேசன் நகர செயலாளர்கள் வேல்முருகன், பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் நல்லம்மாள் பேரூர் செயலாளர்கள் காங்கமுத்து, பாலமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் செல்வராஜ் ,ராஜவேல் ,ஒன்றிய பொருளாளர் பைத்தூர் ரவி ,ராஜேந்திரன், சந்திரன்,ஒன்றிய கவுன்சிலர்கள் சேகர், அய்யாக்கண்ணு, செந்தில்குமார், ரவிச்சந்திரன்,கயல்விழி அன்பரசு, தனலட்சுமி சசிகுமார், பரமேஸ்வரி வீராசாமி, லிங்கம்மாள் பழனிசாமி, ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாலசுப்பிரமணியம் ஆத்தூர்.