கோவையில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திடீரென மேடையில் தோன்றி கலக்கிய விஜய் டிவி புகழ் பாலா!!

   கோவை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திடீரென மேடையில் தோன்றி கலக்கிய விஜய் டிவி புகழ் பாலா! – கல்லூரி மாணவ,மாணவிகள் ஆரவாரம்.

கோவை காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2019-2022 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் மேலாண் இயக்குனர் லஷ்மிநாராயணசாமி,மற்றும் சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் சுகுணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் முதல்வர் கோவிந்தராஜுலு , டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..இதில் சிறப்பு விருந்தினராக, மேட்டுப்பாளையம் காவல் துறை சரக டி.எஸ்.பி.பாலமுருகன் கலந்து கொண்டு , கல்லூரி படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள் வாழ்வில் சந்திக்க உள்ள சவால்கள் , அவற்றை தாண்டி சாதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். மேலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் துறைகளில் முழு அர்ப்பணிப்புடன் செல்படுவதால், பெரிய சாதனைகளை சாதிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.முன்னதாக விழாவில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்கள் மாநில , மாவட்ட , மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற விளையாட்டு , அறிவு திறன் கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு சான்றிதழ்களும்,அண்மையில் மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டாமிடம் பிடித்த சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கியும் கவுரவித்தனர்…தொடர்ந்து விழாவின் ஒரு பகுதியாக,சிறப்பு அழைப்பாளராக மேடையில் தோன்றிய விஜய் டிவி புகழ் பாலா மற்றும் விக்கி சிவா ஆகியோர் மிமிக்ரி மற்றும் காமெடியுடன் மாணவ,மாணவிகளிடம் பேசினர்.விழாவில் மாணவ , மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் கல்லூரி பேராசிரியர்கள் , பெற்றோர் ,மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp