அவசரம்! ரேஷன் கார்டை ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? இன்றே கடைசி நாள்!

    ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

சமீபத்தில், ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் மூலம் இடம் பெயர்ந்து வாழும் மக்கள் எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். இந்தியாவில் எங்கு இருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வசதியே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பொன்று வெளியானது. அதன்படி, ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் பொருட்களையும், அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி முதலில் மார்ச் 31 ஆக இருந்தது.
ஆனால் நிறையப் பேர் இணைக்காமல் இருந்தனர். இதனால் இதனுடைய காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காமல் இருப்பவர்களுக்கு இன்றோடு காலக்கெடு முடிவடைகிறது.

எவ்வாறு இணைப்பது?

1. முதலில் ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற வெப்சைட் செல்லவும்.

2. இப்போது Start Now என்பதை கிளிக் செய்யவும்.

3. அடுத்து உங்கள் முகவரி, மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும்.

4. இப்போது Ration Card Benefit என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

5. அதன் பிறகு ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.

6. உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி (OTP) வரும். அதை நிரப்பி submit கொடுத்தால் போதும்.

ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக சென்று இணைக்க விரும்பினால், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டு தாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் ஆதார் அட்டை பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பை ரேஷன் கார்டு மையத்தில் செய்து கொள்ளலாம்.

-சோலை. ஜெய்க்குமார்/ Ln. இந்திராதேவி முருகேசன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp