கோவை: கரும்புக்கடை ஆசாத் நகர் பகுதி மக்களின் கவனத்திற்கு மின்வாரிய ஊழியர்களின் வேண்டுகோள். இந்த பகுதியில் இருக்கின்ற டிரான்ஸ்பார்மர்க்கு அருகில் அதிகமான குப்பைகளை கொட்டி வருகின்ற காரணத்தினால் மின்சார சாதனங்கள் பாதிக்கப்பட்டு அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இது உங்களுடைய அறியாமையின் காரணமாக ஏற்படுகின்ற சம்பவம்.
ஆகவே பொதுமக்கள் மின்சாரத் துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து குப்பைகளை இந்தப் பகுதியில் கொட்டாமல் குப்பைத் தொட்டியில் இந்த குப்பைகளை கொட்டி விட்டால் உங்கள் பகுதியில் ஏற்படுகின்ற மின்சார தட்டுப்பாட்டை சரிசெய்ய முடியும்.
எனவே பொதுமக்கள் உங்கள் பகுதியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளவும்
மின்சார தட்டுபாடு இல்லாத பகுதியாகவும் இருக்க நீங்கள் தான் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டு கொண்டனர்
நாளைய வரலாறு செய்திக்காக
-ஜாபர், தொண்டாமுத்தூர்.