ஆனைமலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…!!! கோவை மாவட்டம் ஆனைமலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆனைமலை முக்கோணம் பகுதியில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வேலைத் திட்டத்தை சிதைக்காமல் செயல்படுத்தவும், தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி வேலை நாட்களை தமிழக அரசு 150 நாட்களாக அறிவிக்கவும், தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித் திட்டத்தை தொடர்ந்திடவும், மேலும் பல கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.