ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற வேண்டி ஒரு கோடி ரூபாய் செலவில் ஆனைமலையில் சப் கலெக்டர் ஆய்வு. சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு இடையூறாக இரண்டு மரங்கள் உள்ளதால் அதனை வெட்டி அகற்றிட வேண்டுமென்று ஆனைமலை பேரூராட்சி சார்பாக தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் செலவில் பஸ் டெர்மினல் கட்டும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்தப் பணிகளை பொள்ளாச்சி சப் கலெக்டர் சுபம் ஞான தேவ் ராவ், நேற்று ஆய்வு செய்தார் அப்போது அவருடன் தாசில்தார் பானுமதி, வருவாய் ஆய்வாளர் கற்பகவல்லி, ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்க குமார், மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.