ஆனைமலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பொதுமக்களிடம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தன்னார்வலர்கள் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஆனைமலை முக்கிய வீதிகள் வழியாக சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
பின்னர் தர்மராஜா வீதியில் பேரூராட்சி தலைவர் செயல் அலுவலர் தன்னார்வலர்கள் பேரூராட்சி உறுப்பினர்கள் இணைந்து அப்பகுதியில் நாவல். புங்கன். வேம்பு. இலுப்பை. போன்ற மரக்கன்றுகளை நடவு செய்தனர்
இந்த நிகழ்வில் ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்க குமார் மற்றும் ஆலம் விழுது தன்னார்வ அமைப்பு பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை,