எல்ஜி யின் கன்ட்ரோலருடன் கூடிய இண்டலிஜெண்ட் மற்றும் ஆற்றல்-திறனுள்ள LD சீரீஸ் இரண்டு-நிலை, டைரெக்ட் டிரைவ், டூப்ளெக்ஸ் கம்ப்ரஸர் இன்டெக் 2022 இல் அறிமுகம். 10 ஹெச்பி மற்றும் 15 ஹெச்பி டூப்ளக்ஸ் டைரக்ட் டிரைவ் மெஷின்கள் பாதி அல்லது முழு சுமை திறன் கொண்ட பல்வேறு கம்பிரஸ்டு ஏர் தேவையை பூர்த்தி செய்யும், அதிக செயல் நேரம் மற்றும் குறிப்பிடத்தக்க மின்சார செலவு குறைப்புகளை உறுதி செய்யும். இண்டலிஜெண்ட் XT கண்ட்ரோலர் இரண்டு கம்பிரஸ்டு ஏர் யூனிட்டுகளுக்கு இடையேயான பயன்பாட்டைக் குறைத்து, மானுட ரீதியிலான இடையீட்டைக் குறைக்கும்.
உலகின் முன்னணி ஏர்- கம்ப்ரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான, எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் (BSE: 522074 NSE: ELGIEQUIP), 62 ஆண்டுகளுக்கும் மேலான ஏர் கம்ப்ரஸர் நிபுணத்துவத்துடன், நாளைய இந்தியாவை உருவாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை இன்டெக் -இன் 19வது பதிப்பில் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த, சர்வதேச இயந்திர கருவிகள் மற்றும் தொழில்துறை வர்த்தக கண்காட்சியில் 100,000 வணிக பார்வையாளர்கள் 200+ தயாரிப்பு வகைகளைக் காட்சிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டெக்- இல் ஒரு பிளாட்டினம் ஸ்பான்சரான எல்ஜி அதன் LD சீரீஸ் டூ-ஸ்டேஜ் டைரெக்ட்-டிரைவ், இண்டலிஜெண்ட் ரெசிப்ரோகேட்டிங் ஏர் கம்ப்ரஸரை ஒரு நிரூபிக்கப்பட்ட நியூரான் XT கன்ட்ரோலருடன் எல்ஜி ஸ்டாண்ட் எண். 2, ஹால் Bயில் அறிமுகம் செய்தது. LD சீரிஸ் டூ-ஸ்டேஜ் டைரக்ட் டிரைவ் 10ஹெச்பி மற்றும் 15 HP டூப்ளெக்ஸ் கன்ட்ரோலர் பதிப்புகள், வாடிக்கையாளர்கள் தங்களின் கம்பிரஸ்டு ஏர் தேவை மற்றும் பயன்பாட்டு முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கக்கூடிய மூன்று சிறந்த கம்ப்ரசர் மோடுகளுடன் எதிர்காலத்திற்கும் ஏற்ப தயாராக உள்ளன. மேலும், எல்ஜி அதன் EG, EN மற்றும் EV வரிசை ஆயில்-லூப்ரிகேட்டட் ஸ்க்ரூ ஏர் கம்ப்ரசர்களையும் கண்காட்சியின் ஒரு பகுதியாகக் காட்சிப்படுத்தியது.
எரிசக்தி திறன் என்பது தொழில்துறை முழுவதும் வளர்ந்து வரும் சிக்கலாக உள்ளது. எங்களின் வாடிக்கையாளர்கள் எப்போதும் அதிகரித்து வரும் மின்சாரச் செலவுகள், ஏற்ற இறக்கமான சந்தை தேவை மற்றும் குறைந்த அளவிலான தொழில்துறை தளம் ஆகியவற்றால் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். வழக்கமான கம்ப்ரஸர் தொழில்நுட்பத்தை மாற்ற எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் ஒவ்வொரு நாளும் உத்வேகமாக முயற்சிக்கின்றன. 3HP முதல் 15HP வரையிலான டைரக்ட்-டிரைவ் ரெசிப்ரோகேட்டிங் ஏர் கம்ப்ரசர்களின் LD சீரீஸ் வரம்புகள், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆற்றல் திறன், தொழில்துறையில் முன்னணி நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவற்றின் முக்கிய நன்மைகளை வழங்குகின்றன” என்று டாக்டர் ஜெயராம் வரதராஜ், நிர்வாக இயக்குனர், எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், தெரிவித்தார்.
– சீனி,போத்தனூர்.