கோவை பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நடராஜ் மணியகாரர் காலனி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஐயப்பனுக்கும் 20 வயதுடைய கமலி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் உறவுகளின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் திருமண செலவுக்காக பெற்ற கடனை கடந்த நான்கு மாதங்களாக செலுத்த முடியாமல் ஐயப்பன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பொழுது வீட்டுக்கு வந்த அம்மா சாந்தி மற்றும் உறவினர்கள் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த போது ஐயப்பன் துாக்கு மாட்டி கொண்டது தெரியவந்தது.
கடன் பிரச்சினையால் திருமணமான சில மாதங்களில் மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்குப் பகுதி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்.