கோவை சோமையம்பாளையம் காவல் நிலையம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை மிகவும் தரமற்றதாக போடப்பட்டுள்ளது.அதே சமயம் சோமையம்பாளையம் அருகே கணுவாயில் இருந்து நவவூர் செல்லும் பாதையில் தரை பாலம் பழுது அடைந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளார்கள் பொதுமக்கள் இந்த தரமற்ற சாலையை பயன்படுத்தும் பொழுது இந்த சாலை குறுகிய காலத்தில் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை இதைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் உடனடியாக பாதையை சரி செய்து தர வேண்டும் என இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜெயக்குமார், கோவை.
One Response
Super job