கோவை துடியலூர் வடமதுரை பகுதியில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நிதியுதவியுடன் கட்டப்பட்ட புதிய பள்ளி வகுப்பறைகளை மருத்துவமனையின் செயல் இயக்குனர் அருண் பழனிசாமி திறந்து வைத்தார்!

 

 

 

கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் 62 மற்றும் கோயமுத்தூர் மெட்ரோபாலிடன் லேடீஸ் சர்க்கிள் 23 ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து ஃப்ரீடம் த்ரூ எஜுகேஷன் கல்வியில் சுதந்திரம் என்ற திட்டத்தை முன்னெடுத்து செயல்பட்டுவருகின்றன.இந்த திட்டத்தின் வாயிலாக கே.எம்.சி.எச்.மருத்துவமனையுடன் இணைந்து, ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்,கழிப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.. அதன் படி கோவை துடியலூர் வடமதுரை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுமார் ஐம்பது இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகளை கே.எம்.சி.எச்.மருத்துவமனை நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.

இதற்கான துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது… இதில் மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிங்களை திறந்து வைத்தார்.. இந்நிகழ்ச்சியில் கோயமுத்தூர் மெட்ரோபாலிடன் ரவுண்ட் டேபிள் 62 தலைவர் சூர்யமூர்த்தி மற்றும் கோயமுத்தூர் மெட்ரோபாலிடன் லேடீஸ் சர்க்கிள் தலைவர் திருமதி மீனாட்சி மெய்யப்பன் ,உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து டாக்டர் அருண் பழனிசாமி,மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசினர்..கோவையில்முன்னணி பல்துறை மருத்துவமனையாக தரமான மருத்துவ சேவைகள் அளித்துவரும் கேஎம்சிஹெச் மருத்துவமனை தனது சமூக நல அக்கறையின் வெளிப்பாடாக பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து நடத்திவருகிறது.

கடந்த மாதம் இதே போல கலிக்கநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை கட்டிடங்களை கட்டி கொடுத்ததாகவும், தொடர்ந்து இது போன்ற திட்டங்களை ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவதுடன் பல்வேறு சமூக நல மேம்பாட்டு திட்டங்களுக்கு கேஎம்சிஹெச் தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டிவருவதாக அவர் தெரிவித்தார்.

விழாவை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பயன் பெறும் விதமாக கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமில், மகளிர் மற்றும் மகப்பேறு, எலும்பு முறிவு மற்றும் மூட்டு, காது மூக்கு மற்றும் தொண்டை, கண் மற்றும் பொது நல மருத்துவம், பொது அறுவை சிகிச்சை குறித்த பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

-சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp