கோவை பொள்ளாச்சி இடையே புதிதாக நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு அதில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன முக்கியமாக வாகன நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன, இந்த சூழ்நிலையில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை இடையே ஒத்தக்கால் மண்டபம் மற்றும் கிணத்துக்கடவு இடையே புதிதாக டோல்கேட் ஏற்படுத்தப் போவதாக செய்திகள் வந்துள்ளன.
எனவே அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு டோல்கேட் வேண்டாமென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். எனவே பொது மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மாவட்ட நிர்வாகத்தினர் தக்க முயற்சி எடுத்து பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக உள்ள இந்த டோல்கேட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
-ராஜேந்திரன்.