கோவை மாவட்டம் கரும்புக்கடை ஆசாத்நகர் செல்லும் வழியில், பொதுமக்கள் குப்பைகள் கொட்டி வருவதால்
அந்த இடத்தில் சாலை பள்ளமாக இருப்பதாலும் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இதில் முதியவர்களும் பெண்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கவும் 86 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இதனை சரி செய்து விபத்தை தடுக்க வேண்டும் என்று ஆசாத் நகர் பகுதி மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜாபர், தொண்டாமுத்தூர்.