சிங்கம்புணரி உபகோட்டத்திற்குட்பட்ட சிங்கம்புணரி துணைமின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின்பாதைகளில் 04.06.2022 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அவசர கால பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
இந்தப் பராமரிப்புப் பணியின் போது சிங்கம்புணரி நகரில் திண்டுக்கல் ரோடு, முத்துவடுகநாதர் நகர், குறிஞ்சி நகர், தேத்தாங்காடு, பேருந்து நிலையம், சுந்தரம் நகர், நியூ காலனி, யூனியன் ஆபிஸ் ரோடு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலப்பட்டி, நாட்டார்மங்கலம், கோட்டை வேங்கைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 04.06.2022 அன்று காலை 10மணி முதல் மதியம் 12 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.