சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய மனிதநேய மக்கள் கட்சி!
நேற்று சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த மனிதநேய மக்கள் கட்சியினர், மருத்துவ அதிகாரி அயன் ராஜிடம் அனுமதி பெற்று, அங்கிருந்த உள் நோயாளிகள் அனைவருக்கும் ரொட்டி, பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை வினியோகம் செய்தனர்.
நிகழ்வில் அரசு தாலுகா தலைமை மருத்துவர் அய்யன்ராஜ், மமக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் முகமது அசாருதீன், மாவட்ட சிறுதொழில் சங்க தலைவர் சிவனேஷ் ராஜா, மமக நகரத் தலைவர் அப்துல் வஹாப், செயலாளர் K.சேக் அப்துல்லா, பொருளாளர் சேக் அப்துல்லா, மமக நகரச் செயலாளர் ஜாபர் அலி மற்றும் எஸ் டி பி ஐ கட்சியைச் சேர்ந்த அன்வர்தீன், நசீர் ராஜா ஆகியோரும், திருப்பத்தூர் நகர மமக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.