கோவை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சாலை ஓரங்களில் வடமாநில இளைஞர்கள் சாத்துக்குடி, அன்னாசிபழசாரு போன்ற ஜூஸ் கடைகள் வைத்து விற்பனை செய்து வருவதை பார்த்திருப்பீர்கள், அங்கு நடக்கும் வியாபாரமோ அமோகம் தான் ஆனால் அவர்கள் பயண்படுத்தும் பழங்கள், ஐஸ் கட்டிகள் சுகாதாரமற்று காணப்படுகிறது,
ஈக்கள் மொய்வதும் அழுகும் நிலையில் உள்ள பழங்களையும் பயண்படுத்தும் வாடிக்கையாகிவிட்டது பொதுவாக அன்னாசி பழ ஜூஸ், இப்படிப்பட்ட கடைகளில் குளிர்பானங்கள் அருந்தும்போது கவனம் தேவை, அவர்கள் வைத்துள்ள பழங்கள் ஜூஸ் போடும்போது எடுக்கும் பழங்களை பார்த்து வாங்கி பருகினால் சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம்.
-செய்யத் காதர் குறிச்சி.