தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!!

நெல்லையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பணி நியமனம் பெறுபவர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுபவர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.

மேலும் முகாமில் கலந்து கொள்ள வருகின்ற அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் ஹரிபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்தியாளர்

-அன்சாரி நெல்லை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp