தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி 2019 ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள விதிகளை மீறுவோருக்கு நிலுவையில் உள்ள அபராத தொகையை காட்டிலும் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு 1000 ரூபாய்,லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டினால் போலீசாரே 10000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
-M.சுரேஷ்குமார்.