தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் மின் சார்ந்த பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 30ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அவ்வப்போது மின்கம்பங்களில் ஏற்படும் பழுது அடைதல், மின் துண்டிப்பு, மின் கசிவு ஏற்பட்டால் மற்றும் சாய்ந்த மின் கம்பிகளை நிமிர்த்துதல் உள்ளிட்ட பணிகளை மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் வாரிய தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட இந்த மின்சாரத்தை கையாளும் போது எதிர்பாராத விதமாக பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை பிரச்னை ஏற்படுவதால் மக்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர். அதனால் தடையில்லா மின்சாரத்தை மக்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக மின்தடை செய்யப்படுவதில்லை. எந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறார்களோ அந்த பகுதிகளில் மட்டும் மின் தடை செய்யப்படுகின்றன. அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஸ்டேட் வங்கி காலனி, இஞ்ஞாசியார் புரம், எழில்நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சி நகர், அண்ணா நகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம்,சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, பீச் ரோடு, இனிகோ நகர், வி.இ.ரோடு, பாலவிநாயகர் கோயில் தெரு, டூவிபுரம், ஜெராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம், சிவன் கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, சந்தை ரோடு, வடக்கு காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு, ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 30ம் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் அறிவித்திருக்கிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன்,.தூத்துக்குடி.