கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளின் தனிப்பிரிவு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த கட்டடத்தின் முகப்பில் பொதுமக்கள் சென்று வருவதற்கான பாதை அமைந்துள்ளது இந்தப் பாதைகளில் அந்தப் பகுதியிலுள்ள தெருநாய்கள் வந்து படுத்துக் கொள்கின்றன.
பொதுமக்கள் சுகாதார மையத்தின் உள்ளே சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.அதை கடந்து செல்வதற்கு பயமாகவும் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் சென்று வர ஏதுவாக இருக்க வழிவகை செய்யுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கேட்டுக் கொள்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஹரி கிருஷ்ணன் பொள்ளாச்சி.