நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசியவர்களைUAPA சட்டத்தின் கீழ் கைது செய்திட கோரி கோவை தெற்கு மாவட்ட தமுமுக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஜூன் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் அகமது கபூர் தலைமையில் நடைபெற்றது.
இதில், மமக மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா வரவேற்புரை ஆற்றினார். தமுமுக மாவட்ட செயலாளர் முகமது மைதீன், மாவட்ட பொருளாளர் முஜிபுர்ரகுமான் பொள்ளாச்சி சையத்அமீர், ஆனைமலை சாகுல் அமீது, சூளேஸ்வரன்பட்டி காஜா உசேன், வால்பாறை செபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் ஹமீது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கோவை சாகுல் அமீது போன்றவர்கள் கண்டன உரையாற்றினார்கள். பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் தலைவர் ஷாநவாஸ்கான் மற்றும் கோவை தெற்கு மாவட்டம் சார்ந்த நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள் உட்பட அதிகப்படியானவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணைத்தலைவர் கலீல்ரஹ்மான் நன்றியுரை ஆற்றினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.