சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வருடம் பள்ளி கட்டணத்தை செலுத்தாத மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்காமல் பள்ளி வளாகத்தில் உட்கார வைத்தது பள்ளி நிர்வாகம்.
கொரானா காலகட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது ஏழை நடுத்தர மக்கள். அவர்கள் அதிகமாக அரசுப்பள்ளியில் படிப்பவர்களும் நடுத்தர மக்களை சார்ந்தவர்களே அன்றாடம் பிழைப்பு நடத்தி தான் வாழ்க்கை நடத்தி வரும் இவர்களுடைய பிள்ளைகளுக்கு அரசு கருணை காட்ட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு கல்வி கட்டாயம் என்று வெறும் விளம்பரம் மட்டும் செய்யாமல் அரசு அவர்களுக்கு போதிய உதவிகளை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு மின்விசிறிகள் மட்டுமே உள்ளது ஆனால் பள்ளி நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு மின்விசிறி என்று இருக்கிறது. கோடை காலம் வெப்பம் எப்படி இருக்கும் என்று நமக்கு சொல்லி தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி இருக்க காற்றோட்டமான ஒரு சூழல் மாணவர்களுக்கு அவசியம் இதை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக இதை சரி செய்ய வேண்டுமென்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அப்துல் ரஹீம், திருவல்லிக்கேணி.