கோவை, ஜீன். 4 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் வங்கிக் கணக்குகளை முடக்கிய அமலாக்கத்துறை கண்டித்து ஆர்ப்பாட்டம் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் எம்.ஐ அப்துல் ஹக்கீம் தலைமை விகித்தார். கோவை மாவட்ட செயலாளர் உபைதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினர்.
பாப்புவர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில பேச்சாளர் முஹம்மது பயாஸ், த.பெ.தி.க மாநில பொதுச்செயலாளர் சூ.ராமகிருஷ்ணன் , ஆதி தமிழர் பேரவை மாநில செயலாளர் ரவிக்குமார், தமிழ் புலிகள் இளவேனில், மே 17 இயக்கம் மாநில செயலாளர் சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணி , மாநில செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள் . ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் கோட்டைமேடு டிவிஷன் தலைவர் அப்பாஸ் நன்றியுரை ஆற்றினார்.
படம் : பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் வங்கிக் கணக்குகளை முடக்கிய அமலாக்கத்துறை கண்டித்து ஆர்ப்பாட்டம் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் எம்.ஐ அப்துல் ஹக்கீம் தலைமை விகித்தார்.
-சீனி, போத்தனூர்.