பொள்ளாச்சி அருகே உள்ள நல் ஊத்துக்குளி என்ற கிராமத்தில் நாகராஜ் என்பவர் இன்று இறந்துவிட்டார் அவரின் உடலை அடக்கம் செய்யாமல் அவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரணத்தை விசாரித்த பொழுது? இவர்களுக்கு புதைப்பதற்கு ஆற்றோரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு உடல் புதைக்கும் அளவுக்கு இடம் இருப்பதால் மயானத்திற்கு வேறு இடம் வேண்டும் என்றும், இந்த நிலை காலங்காலமாக நீடித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொது மக்களுடன் அந்த பகுதி இளைஞர்களும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர் மக்கள் கூடியதால்
பதட்டமான நல் ஊத்துக்குளி பகுதிக்கு தாசில்தார், காவல்துறையினர், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், என பலர் அந்த மக்களிடம் இது தொடர்பாக பேசி வருகின்றனர். நல்ல முடிவு கிடைக்குமா?..
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.