கோவை, ஜுன்.6- கோவை மருதமலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் சிலர் மருதமலை கோவில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். ரூ.300 சம்பளம் இவர்கள் வனத்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க மருதமலை கோவிலில் பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். அவர் தற்போது வரை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரு பிரிவினரும், 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு பிரிவினரும் தூய்மைப் பணியை செய்து வந்தனர். அதற்கு நாளொனறுக்கு ரூ.300 சம்பளம் வழக்கப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து ஊழியர்களும் வேலையில் இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. விடுமுறை நாட்கனில் ஒரு சில நேரங்களில் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை தூய்மைப் பணியில் ஈடுபட வைப்பதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஊழியர்கள் விடுமுறை நாட்கனில் வெளியாட்களை வேலைக்கு அமர்த்தி விடுகின்றனர். ஷிப்ட் அடிப்படையில் பழைய முறைப்படி எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். என மலைவாழ் மக்கள் பணிக்கு செல்லவில்லை. அவ்வாறு செல்லாததால் வெளி ஆட்களை பணியில் அமர்த்தி உள்ளனர்.
குப்பைகள் இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது:- இந்த தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் எங்களை விடுத்து வெளியூர் நபர்களை வேலையில் அமர்த்தி உள்ளனர். இரவு நேரம் என்றும் பாராமல் வேலை செய்து வந்தோம். யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பல ஆண்டுகாலம் கோவிலில் உள்ள வேலைகளை செய்து வாழ்ந்து விட்டோம். எங்களுக்கு வேலை மறுக்கும் பட்சத்தில் மரம் வெட்டும் தொழிலுக்கு செல்ல நினைக்கிறோம்.
மரம் வெட்டும் தொழில் செய்தால் மழை அழிந்துவிடும் என்று அரசு எடுத்த முடிவினால் இன்று வரை கோவில் பணி செய்து வருகிறோம். கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சுத்தம் செய்யவில்லை. இதனால் மருதமலை கோவில் பகுதியில் குப்பைகள் அதிகளவில் தேக்கம் அடைந்து கோவில் முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப்கோவை.