கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள CSA ஆண்கள் மேல்நிலைபள்ளி விடுமுறைக்குபின் இன்று திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்தோடு பள்ளிகூடத்திற்கு வருகை புரிந்தார்கள்.
அவர்களை ஆசிரியர் ஆசிரியைகள் புன் சிரிப்புடன் வரவேற்று அவர்களுக்கான வகுப்பறைகளை ஒதுக்கித்தந்து மாணவர்களை உற்சாக மூட்டினார்கள்.
மேலும் ஆசிரியர் கூறுகையில் “தங்களது பள்ளியில் படித்த மாணவன் AR அப்துல்லா
நீட்தேர்வில் வெற்றிபெற்று பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில்
MBBS மருத்துவபடிப்பிற்கு தேர்வாகியது தங்கள் பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-முஜீப், தொண்டாமுத்தூர்
புகைப்பட நிருபர் கோவை.