கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என சுகாதாரத் துறையினர் மே 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது, அந்த ஆய்வில், கடைகளில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை விற்பனை இல்லை என்ற பதாகையை விற்பனை கடைகளில் உள்ளதா எனவும் கடைகளில் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கர் அவர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்குள்ள கடைகளில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை விற்பனை இல்லை என்ற பதாகை மற்றும் புகையிலையின் தீமைகள் பற்றிய பதாகைகள் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் சுகாதாரமான முறையில் தயார் செய்து பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யுமாறும் அறிவுறுத்தினர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.