வேலூர்:தடைகாலம் முடிந்து மீன்கள் வரத்து இல்லை வேலூர் மார்க்கெட்டில் மீன்களின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை கடலில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக மீன் பிடி தடை காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுவாக எல்லா ஊர்களிலும் இறைச்சி மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாக இருப்பதுடன் விலையும் அதிகரிக்கும்.
வேலூரில் இறைச்சி மார்க்கெட்டை பொருத்தவரை சென்னை,தூத்துக்குடி, நாகப்பட்டினம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூர் ஆகிய இடங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 பெரிய சரக்கு லாரிகளில் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி கடந்த 16ம் தேதி வரை முடிந்திருந்தாலூம் அடுத்து ஒரு நாட்களில்2அல்லது 3 லாரிகளில் மட்டுமே குறைந்த அளவு மீன்கள் மங்களூர் கோழிக்கோடு ஆகிய இடங்களில் இருந்து வந்தன. இதனால் அனைத்து வகை கடல் மீன்களின் விலையும் உச்சத்தில் இருந்தது.
மீன்பிடி தடை காலம் நீங்கிய நிலையில் மீன்களின் வரத்து அதிகரிக்கும் இதனால் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை புதிய உச்சத்தை தொட்டது.அதன்படி வஞ்சிரம் மீன் கிலோ 1600, இறால் ரூ 400,சங்கரா ரூ 450, நெத்திலி ரூ 300,வவ்வால் ரூ900 ஆக விற்பனையானது .அதேபோல் நண்டு கிலோ ரூ800 வரை விற்பனையானது. இது தொடர்பாக வியாபாரிகளிடம் கேட்டபோது தடை காலம் முடிந்ததும் மீன்களின் வரத்து குறைந்தது இருப்பதற்கு தடை காலம் முடிந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருவதும் காரணமாக இருக்கலாம். வருங்காலத்தில் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உண்டு என்றனர்.
-P. இரமேஷ், வேலூர்.