மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி. தேர்வு எழுதிய மாணவிகள் 144பேர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி.
தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்து வரும் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் மாணவிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். மேலும் இப்பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கிய அரசிற்கும் மேட்டுப்பாளையத்தில் உள்ள சமூக நல அமைப்புகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நன்றி கூறிக் கொள்கிறோம். வருங்காலங்களில் இப்பள்ளி மென்மேலும் பல சிறப்புகளை பெற வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம் என்று கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயலாளர் VMT ஜாபர் கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், ஜாபர்.