ஆவடி ரயிலில் கூட்ட நெரிசலில் சென்ற கல்லுாரி மாணவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ஏழுகிணறு, பாளையப்பன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 42. இவரது மகன் நரேஷ், 20. இவர், பட்டாபிராம் ஹிந்து கல்லுாரியில், பி.ஏ., முதலாமாண்டு படித்தார். நரேஷ் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு கல்லுாரி முடித்து விட்டு, அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில், வீட்டிற்கு திரும்பினார். ஆவடி – அண்ணனுார் ரயில் நிலையத்திற்கு இடையே செல்லும் போது கூட்ட நெரிசலில் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை, ‘108’ ஆம்புலன்ஸ் வாயிலாக அவரது நண்பர்களும், அவரது அண்ணன் உமேஷ், 22, ஆகியோரும் சேர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
நாளைய வரலாறு செய்திக்காக,
-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை.