வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆபத்தான நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்த்துக் கொள்ளவும்…???? இயற்கை எழில் சூழ்ந்த வால்பாறைக்கு சுற்றுலாவுக்கு வருகை தருபவர்கள் அந்தப் பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளை கண்டவுடன் அதன் ஆழம், குளிப்பதற்கு ஏற்ற இடமா என்பதை அறியாமல் இறங்கி குளிப்பதனால் பல உயிர் சேதங்கள் ஏற்படுகிறது.
நேற்று முன்தினம் கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து முகமது மன்சூர் என்பவர் வால்பாறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்ததாக தெரிகிறது சுற்றுலா வந்தவர் நல்லா காத்து எஸ்டேட் அருகே கூழாங்கல் ஆற்றில் குளிப்பதற்கு இறங்கிய பொழுது நீர் சுழலில் சிக்கி உயிரிலந்து விட்டார்.
இந்த பகுதி மிகவும் மோசமான பகுதி வால்பாறை சுற்றுலாவிற்கு வருகை தருபவர்கள் அனுமதி இல்லாத நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்த்துக் கொள்ளவும் அதேபோன்று ஆழியார் அணைக்கு கீழே உள்ள பகுதியிலும், ஆத்துப்பாறை போன்ற பகுதிகளில் குளிக்கும்பொழுது பாதுகாப்புடன் இருக்குமாறுவிழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
நாளை வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.