வீடியோ எடுத்து மிரட்டியதாக பெண் பாலியல் புகார் – சென்னை கானா பாடல் இளம் இசையமைப்பாளர் கைது!!

    ஆபாச படத்தை வெளியிடுவேன் என கானா பாடல் பாடியே, காதலியை மிரட்டிய கானா இசையமைப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சபேஷ் சாலமன் என்ற கானா பாடல் இசையமைப்பாளர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடன் பலமுறை தனியாக இருந்ததாகவும், பின்னர் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யூ-டியூப்பில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார்.

மேலும் சபேஷின் தந்தை செல்வகுமாரும் சபேஷுக்கு உடந்தையாக இருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையில் கானா பாடல் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன், பாதிக்கப்பட்ட பெண்ணை கானா பாடல் பாடி மிரட்டிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் குற்றஞ்சாட்டப்பட்ட சபேஷ் சாலமன் மற்றும் அவரது தந்தை செல்வகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சபேஷ் சாலமன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியது உறுதியான நிலையில் சபேஷ் சாலமன் மீது பெண்ணின் மானத்துக்கு குந்தகம் விளைவித்தல், மிரட்டல், தகவல் தொழிட்நுட்பச் சட்டப் பிரிவு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சபேஷ் சாலமனிடம் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-வேல்முருகன் சென்னை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp