கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திப்பம்பட்டி S T C கல்லூரி அருகே உள்ள காட்டில் திப்பம்பட்டியைச் சார்ந்த ஈஸ்வரன், சுமார் 5 ஏக்கர் அளவில் காயர் பித் கொட்டி உலர்த்தி விற்பனை செய்துவந்துள்ளார். இந்தநிலையில் கொட்டப்பட்டிருந்த காயர் பித்தில் ஜூன் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 12 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. தீ கட்டுக்கடங்காமல் சென்றதால் பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இத்தகவலை அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு நிலை அலுவலர் பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை முற்றிலும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீ விபத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள் சேதம் அடைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்தத் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தகவல் தெரியவருகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.