பெண்கள் பிரிவில் கேரளா மாநில மின்சார வாரியம் அணி மற்றும் ஆண்கள் பிரிவில் இந்திய கப்பல் படை அணிகள் வெற்றிபெற்று கோப்பையை வென்றன. கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் “அகில இந்திய அளவிலான 55 – வது ஆண்டு ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 19 – வது ஆண்டு பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள்” கோவையில் நேரு விளையாட்டு எதிர் உள்ளே மைதானத்தில் கடந்த 29-ம் தேதி துவங்கி இன்று (ஜுன் 3-ம் தேதி) வரை 6 நாட்கள் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பிரிவில் “புது டெல்லி” – இந்தியன் ரயில்வே அணி, “புது டெல்லி” – இந்திய விமானப்படை அணி, “லோனாவாலா” – இந்திய கப்பல் படை அணி, “திருவனந்தபுரம்” – கேரளா மாநில மின்சார வாரியம் அணி, “பெங்களூரு” – பாங்க் ஆப் பரோடா அணி, “சென்னை” – ஸ்போர்ட்ஸ் ஹால்டல் அஃப் எக்ஸலன்ஸ் அணி, “சென்னை” – தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் வுசுறு அணி, “திருவனந்தபுரம்” – கேரளா போலீஸ் அணி மற்றும் “கோயம்புத்தூர்” – கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகிய 9 அணிகள் பங்கேற்றன.
பெண்கள் பிரிவில் “கோல்கத்தா” – கிழக்கு இரயில்வே அணி, “ஹ{பிளி” – தென்மேற்கு இரயில்வே அணி, “சென்னை” – தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் வுசுறு அணி, “மும்பை” மத்திய இரயில்வே அணி, “திருவனந்தபுரம்” – கேரளா மாநில மின்சார வாரியம் அணி, “திருவனந்தபுரம்” – கேரளா போலீஸ் அணி, “சென்னை” – ரைசிங் ஸ்டார் அணி, மற்றும் “கோயம்புத்தூர்” – கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
இன்று (03.06.2022) காலை 7.00 மணிக்கு மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில் ஆண்கள் பிரிவு போட்டியில் கேரளா மாநில மின்சார வாரியம் அணியை எதிர்த்து இந்திய விமானப் படை அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரியம் அணி 72 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்று மூன்றாம் இடத்தையும் (ஜிஷ்ணு ஜி நாயர் 22, ராகுல் சரத் 11, சரத்.ஏ.எஸ் 10). எதிர்த்து விளையாடிய இந்திய விமானப் படை அணி 53 புள்ளிகள் எடுத்து நான்காம் இடத்தை பிடித்தது (ராஜன் 13, சந்தோஷ் 11, ரோஹித் 7).
பெண்கள் பிரிவில் கேரளா போலீஸ் அணியை எதிர்த்து கிழக்கு இயில்வே அணி விளையாடியது. இதில் கேரளா போலீஸ் அணி 63 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்று மூன்றாம் இடத்தையும் (ஜெயலட்சுமி.வி.ஜே 18, அதிரா.எம்.எஸ் 12, ரோஸ்மேரி சஜன் 13). எதிர்த்து விளையாடிய கிழக்கு இயில்வே அணி 61 புள்ளிகள் எடுத்து நான்காம் இடத்தை பிடித்தது (நிமா தோமா பூட்டியா 19, நிவ்யா ராஜ்.பி.பி 15, அவந்தி வர்தன் 11). மாலை 6.15 மணிக்கு நடைபெற்ற 55-வது நாச்சிமுத்து கவுண்டர் ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து இந்தியன் இரயில்வே அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 83 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய இந்தியன் இரயில்வே அணி 70 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கப்பல் படை ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ.1,00,000.00 மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பிடித்த இந்தியன் இரயில்வே அணிக்கு பரிசாக ரூ.50,000.00 மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது, மூன்றாம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரியம் அணிக்கு பரிசாக ரூ.20,000.00 வழங்கப்பட்டது, நான்காம் இடம்பிடித்த இந்திய விமானப் படை அணிக்கு ரூ.15,000.00 – மும் வழங்கப்பட்டது, மேலும் தேர்வு செய்யப்பட்ட திருவனந்தபுரம் கேரளா மாநில மின்சார வாரியம் அணிக்கு நன்நடத்தை ரேணுகா ராமநாதன் நினைவு விருது மற்றும் ரூபாய் 10,000.00 வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற கேரளா மாநில மின்சார வாரியம் அணிக்கு முதல் பரிசு ரூ.50,000.00 மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பெற்ற தென் மேற்கு இரயில்வே அணி அணிக்கு பரிசாக ரூ.25,000.00 மற்றும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த கேரளா போலீஸ் அணிக்கு பரிசாக ரூ.15,000.00 வழங்கப்பட்டது, நான்காம் இடம் பிடித்த கிழக்கு இயில்வே அணிக்கு ரூ.10,000.00-மும், மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய கிழக்கு இரயில்வே அணியை சேர்ந்த நிமா துமா புதியா வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது. சிறந்த வீரருக்கான விருது இந்திய கப்பல் படை அணியின் கவுரவ் சந்தேலுக்கு வழங்கப்பட்டது. இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சக்தி குழுமங்களின் தலைவர் டாக்டர். எம். மாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
-சீனி, போத்தனூர்.