கோவை மாநகராட்சி 86வது வார்டில் உள்ள புல்லுக்காடு பகுதியில் இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு மைதானம் அமைத்திட மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர் MC அவர்களின் சொந்த முயற்சியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் ஆணை வருவதற்கு தாமதமாகும் என்ற சூழலில் மனிதநேய மக்கள் கட்சியின் சொந்த முயற்சியினால் இந்த விளையாட்டு மைதானம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாமன்ற உறுப்பனரின் முயற்ச்சியும் கட்சியின் செயல்பாடும் மாமன்ற உறுப்பினருக்கு மக்களிடத்திலே பாராட்டுதலை பெற்று தருகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக
– I முஜீபுர்ரஹ்மான்,தொண்டாமுத்தூர்.
புகைப்பட நிருபர்