கோவை மாவட்டம் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகளும் உதவிகளும் தி.மு.க வினரால் மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி பகுதி இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தப் பகுதியில் தமிழக விளையாட்டில் ஒன்றான கபடி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 99வட்ட கழகத்தில் 99வது மாமன்ற உறுப்பினர் மு. அஸ்லாம் பாஷா மற்றும் வட்ட பொறுப்பாளர்கள், முரளிதரன் முகம்மது ஜின்னா, அவர்களது தலைமையில் கோண வாய்க்கால் பாளையத்தில் 3 நாட்களாக நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசளிக்கும் விதமாக சிறப்பு விருந்தினராக தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி ரங்கநாதன். கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு கோப்பை வழங்கினார்கள்.
முதல் பரிசாக ₹15,000 ருபாயும் கோப்பையும் 99வது மாமன்ற உறுப்பினர் மு. அஸ்லாம் பாஷா வழங்கினார். உடன் 96 வது மாமன்ற உறுப்பினர் குணசேகரன் வட்ட பொறுப்பாளர்கள் முகம்மது ஜின்னா, முரளிதரன், மற்றும் ஏசிஎஸ்.சுலைமான், ரமேஷ், அசார், சாதிக், மாதவன், ரமேஷ், பைசல் மற்றும் அந்தப் பகுதி பொது மக்கள்பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா.