நெல்லையில் இயங்கி வரும் அர்ரஹ்மான் அறக்கட்டளை சார்பாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பும் நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சாய்மான கட்டில், வாக்கர், கழிவறை நாற்காலி, வீல்சேர், காற்று மெத்தை, போன்ற பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் பாளையம்கோட்டையை சேர்ந்த நோயாளிக்கு கட்டில் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜனாப் பசுல் ரஹ்மான், ஜனாப் பீர் முஹம்மது, ஆகியோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அன்சாரி, நெல்லை.