முன்னோர்களுக்குத் தர்ப்பணம், சிரார்த்தம் என பித்ரு பூஜை அமாவாசை நாட்களில் செய்வது மிகவும் விசேஷமானது. மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்ய முடியாதவர்கள் ஆடி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசை சிறப்பானதாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குவார்கள். எனவே இந்த வகையில் ஜூலை இருபத்தி எட்டாம் தேதி வியாழக்கிழமை அன்று ஆடி அமாவாசையில் நேற்றைய தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் 12 ஆண்டுகளுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
எனவே ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்பராம்பாளையம் ஆற்றோர கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து முன்னோர்களை வழிபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.