கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சிக்குட்பட்ட
வடக்கு பாறைமேடு கிராமத்திலுள்ள அங்கன்வாடி கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இக்கட்டிடம் 10 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை என இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பராமரிப்பு இல்லாத காரணத்தால் கட்டட மேற்கூரை சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் அங்கன்வாடிக்கு வந்து சொல்லும் நிலையில் இக்கட்டிடம் அபாய கட்டத்தில் இருப்பதால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று வடக்கு பாறைமேடு கிராம பொதுமக்கள் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் பகுதியில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்,மக்கள் விரோத செயல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை எங்களுக்கு அனுப்புங்கள் உங்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் நீங்கள் அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் 9942820022
-M.சுரேஷ்குமார்.