கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை மீன்கரை சாலையில்
வளர்ந்தாயமரம் நுழைவாயிலில் ரோட்டோரத்தில் ஹோட்டல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், மதுபான கழிவுகள் மற்றும் தரமற்ற மக்காத கழிவுப் பொருட்கள், மக்களுக்கு நோய் வாய்ப்பினை ஏற்படுத்தும் கழிவுப் பொருட்கள் என அதிக அளவில் கொட்டியுள்ளனர்.
இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது மேலும் இவ்விடத்தில் ஹோட்டல் கழிவுகள் கொட்டுவதால் சாப்பிட வரும் நாய்கள் ரோட்டில் அங்கு மிங்கும் ஓடுவதால் வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வளர்ந்தாயமரம் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-M.சுரேஷ்குமார்.