மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவி இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வருவது வழக்கம். கடந்த ஆறு மாதமாக அருவியில் நீர்வரத்து குறைவாக வந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை ஆனைமலை ஆழியாறு போன்ற பகுதிகளில் அதிகமாக மழை பொழிவு இருப்பதால் அருவியில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்பொழுது நீரின் வரத்து சற்று குறைந்துள்ளது. அருவியில் வெள்ளப்பெருக்கின் போது அடித்துச் செல்லப்பட்ட தடுப்பு கம்பிகளை தற்பொழுது வனத்துறையினர் சீரமைத்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று புதன்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.