இந்தியாவில் கள்ள ஓட்டை தடுக்க புதிய ஏற்பாடு ! இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவுப்பு!!
தேர்தலின் போது பல்வேறு விதமான மோசடிகள் நடந்து வருகிறது. ஒரு நபர் அதிகமான ஓட்டுக்களை போடுவது போன்ற சூழ்ச்சியும் நடக்கிறது குறிப்பிடத்தக்கது. இதனை தடுக்கும் விதமாக பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் இந்த மோசடிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என சில தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க செய்தால் இந்த தவறு நடக்காது என கூறுகின்றன. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரி பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆன்லைன் மூலமாக மக்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எளிமையாக இணைத்துவிடலாம். அதாவது, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ‘6 பி’ என்ற படிவத்தினை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இப்படி செய்த மட்டுமே கள்ள ஓட்டுப்பதிவு தானாகவே குறைந்துவிடும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் இதற்கு சம்மதித்து விரைவில் இணைக்க முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சிவக்குமார்.