கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜூலை 28 பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பொள்ளாச்சி நேதாஜி இளைஞர் பேரவை சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு பள்ளி மாணவ மாணவிகளோடு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் உமாமகேஸ்வரி தலைமையில் பொள்ளாச்சி நகரமன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்து மாணவ மாணவிகளிடம்
உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் ஏபிஜே அப்துல் கலாம் குறித்து மாணவர்களிடையே பேசினார். முடிவில் பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் நன்றியுரையாற்றினார். பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.