சென்னை: தாம்பரத்தின் அருகே உள்ள சிட்லபாக்கம் ஊரில் வசித்து வருபவர் சாந்தகுமார் என்பவர். அவர் ஆட்டோ ஓட்டி தன் குடும்பத்தை நடத்தி வருகிறார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டு பேரும் நன்றாக படிப்பவர்கள் ஆதலால் இருவரையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பது சாந்தகுமாரின் ஆசையாக இருந்து வந்தது. 2019 ஆம் ஆண்டில் கொரோனா காலத்தில் ஆட்டோ ஓட்டமின்றி தன்னுடைய குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்
அதன் பிறகு கடன் வாங்கி சமாளித்து வந்தார்.
தற்பொழுது லாக் டவுன் தளர்ந்த பிறகு சம்பாதிக்கும் பணத்தை வாங்கிய கடனுக்கே கட்ட வேண்டிய நிலை வந்து விட்டது. இதற்கு நடுவில் தங்களுடைய குழந்தைகளுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியாமல் குழந்தைகளை காலேஜிலிருந்து நீக்கிவிட்டனர்.
இதனை அறிந்த நாளை வரலாறு புலனாய்வு மற்றும் மக்கள் விழிப்புணர்வு அமைப்பின் மாநில நிர்வாகிகள் மற்றும் நாளைய வரலாறு புலனாய்வு இதழின் நிர்வாக குழு உறுப்பினர்கள் திருமால் வெங்கடேசன் சந்திரமோகன் ஆகியவர்கள் இணைந்து 15 ஆயிரம் ரூபாயை உதவி தொகையாக வழங்கினார்கள். அதனை அந்தப் பெற்றோர் குழந்தைகளின் படிப்பிற்காக உதவிய
மக்கள் விழிப்பு அமைப்பின் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றியை கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.