தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் கண்டனம்.
“ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு மாத மாதம் மின்கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உத்திரவாதம் தந்து ஆட்சிக்கு வந்த பிறகு மாறாக மின்கட்டணத்தை மத்திய அரசின் வற்புறுத்தலால் அதிகரித்து இருப்பதாக கூறுகிறது.
மின்வாரியத்தில் உள்ள நிர்வாக சீர்கேட்டையும், தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்குவதாலும் தான் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது என்பது தான் நிதர்சன உண்மை.
ஒன்றிய அரசு பாலுக்கு, அரிசிக்கு என்று மக்கள் பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கு GST என்ற பெயரில் ஒரு பக்கம் மக்களை சுரண்டுவதை போல மாநில அரசு ஏற்கனவே மத்திய அரசை காரணம் காட்டி சொத்து வரியை உயர்த்தியது. இப்போது அதை போல மின்சார கட்டணத்தை உயர்த்துவதன் மூலமாக சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு ஒன்றிய மாடலாக செயல்படுவதை ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது.” என ஹைதர் அலி ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் கூறினார்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.