தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அக்காநாயக்கன்பட்டி கிராமம் அருள்மிகு ஶ்ரீ பேச்சியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று (30-07-2022) மாபெரும் முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. அஇஅதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி கிளை கழகம் சார்பில்
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவிற்கு கழக அமைப்பு செயலாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர். கடம்பூர் செ.இராஜு ஆசியுடன் ஓட்டபிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.P.மோகன்.Bsc.,Ex.,MLA கலந்து கொண்டு பெரிய மாட்டு வண்டி எல்கை பந்தையத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து ஞமுதல்பரிசு ரூ.30,001 ஞவழங்கினார்கள். அக்காநாயக்கன்பட்டி கிளை கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கிளை கழக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், கிராம பொது மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.